Tuesday, 15 September 2020

நீட் மரணங்கள்

தமிழ் நா ட்டில் தற்போது நீ ட் தேர்விற்கு பயந்து கொண்டு சில மாணவர்கள்  தற்கொலை செய்து கொள்கின்றனர். இப்படி பட்ட நிகழ்வுகள் ஏன் ஏற்படுகின்றன என்று ஆராய்வது அவசியமாகும். ஒரு தேர்வு உயிர் கொல்லுமா என்று தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இன்னும் பல உயிர் போகாமல் தடுக்க முடியும்.

போட்டி தேர்வு கள் தவிர்க்க முடியாத கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எல்லாம் வணிக மயமாகிவிட்ட உலகில், நம் வாழ்க்கையை வணிக சூழல் தீர்மானிக்கும் நிலை எப்படி ஏற்பட்டது. மக்கள் நல அரசுகள் என்று கூறிக்கொள்ளும், அரசு கள் பெரு நிறுவனங்கள் கொடுக்கும் நன்கொடை களை பெற்று கொண்டு அவர்களின் வணிக தேவை களை பூர்த்தி செய்து கொள்ள அனுமதி அளிக்கின்றன.